Suganthini Ratnam / 2015 ஜூலை 23 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ்; டொரிஸுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை மாலை சந்திப்பு இடம்பெற்றது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் காத்தான்குடி தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி முன்னெடுத்துள்ள அரசியல் வேலைத்திட்டங்கள், இலங்கையின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அப்துர் ரஹ்மான், தலைமைத்துவ சபை உறுப்பினர்களான பலுளுள் ஹக், எம்.ஏ.சி.எம். ஜவாஹிர், பிராந்திய செயற்குழு உறுப்பினர்களான ஏ.ஜி.எம். ஹாறூன், ஏ.எஸ்.எம். ஹில்மி உள்ளிடடோரும் மகளிர் அணி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதேவேளை,ஜேம்ஸ் டொரிஸ் நேற்று புதன்கிழமை மாலை காத்தான்குடியில் 1990ஆம் ஆண்டு தொழுகையில் வைத்து 103 பேர் படுகொலை செய்யப்பட்ட காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சென்று அப்பள்ளிவாசலை பார்வையிட்டார்.
இதன்போது, அப்பள்ளிவாசல் நிரர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடியதுடன், பள்ளிவார்ல் நிலவரம் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.

1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago