2025 மே 15, வியாழக்கிழமை

விழிப்புணர்வூட்டும் நிகழ்வு

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடிவேல் சக்திவேல்

நாடாளுமன்ற தேர்தலில் சரியான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வது தொடர்பில் மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு சனிக்கிழமை (01) மட்டக்களப்பு திக்கோடையில் நடைபெற்றது.

மனித உரிமைகள் இல்லமும் திக்கோடை பாரதி இளைஞர் கழகமும் இணைந்து இந்த விழிப்புணர்வை மேற்கொண்டனர்.

கடந்த காலத்தை மதித்து எதிர்காலத்தைப் பாதுகாப்பவரே உங்கள் தெரிவாகட்டும். சிந்தித்து வாக்களியுங்கள்.

உங்கள் பிரதிநிதி பாதுகாப்பாரா, பிரதேச நலன், சூழல், சிறுவர் மற்றும் பெண்கள் உரிமைகள், பேச்சு, கூடும் சுதந்திரம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட துண்டுப் பிரசுதங்களும் இதன்போது மக்களிடம் வழங்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .