2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

ஓட்டமாவடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, ஓட்டமாவடியில் விசேட அதிரடிப் படையினரின் உதவி நாடப்பட்டு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி 3ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜமால்தீன் அமீன் (வயது 37) என்பவர் பிறைந்துறைச்சேனையிலுள்ள தனது தாயை பார்த்துவிட்டு வரும்போது, ஓட்டமாவடி எல்லை வீதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்த நபர்; சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும என்றும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, ஓட்டமாவடி பிரதேசத்தில் உயிரிழந்தவருக்கு அஞ்சலி தெரிவித்து வெள்ளைக் கொடிகள் கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X