Administrator / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
1990ஆம் ஆண்டு 07ஆம் மாதம், பெரியகல்லாறு பகுதிக்கு வந்த இராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எனது தம்பி குலநாயகம் இன்று வரை வீடு திரும்பவில்லை என பெரியக்கல்லாறைச் சேர்ந்த குலநாயகத்தின் சகோதரி வீ.பாலநாயகி தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மண்டபத்தில் சனிக்கிழமை (22) காலை நடைபெற்ற காணாமல் போனவர்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் போது சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர் கூறியதாவது,
'இராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எனது சகோதரன் உயிருடன் இருக்கின்றானா? இல்லையா? என்பது கூட தெரியாது.
நான்கு வருடமாக தேடினேன். நான்கு வருடத்துக்கு பின்னர் பிரதேச செயலகத்தினால் மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதேபோன்று 1985ஆம் ஆண்டு இரண்டு சகோதர்களை நான் பறிகொடுத்தேன். இவர்களில் ஒருவர் அரச உத்தியோகத்தராவார். மட்டக்களப்பில் இருந்து கல்லாறுக்கு பஸ்ஸில் வரும்போது கல்லடியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக நேரில் கண்டோர் தெரிவித்தனர்.
மற்றைய சகோரன் வேலைக்கு சென்றபோது காணாமல் போனார். இதுவரையில் அவர் தொடர்பிலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை' என்றார்.
9 minute ago
23 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
3 hours ago
4 hours ago