2026 மே 06, புதன்கிழமை

23 பேருக்கு கைவினைப்பொருள் தயாரிப்பு பயிற்சி

Suganthini Ratnam   / 2013 மே 24 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நடத்தப்பட்ட ஒரு மாத இலவச கைவினைப்பொருள் தயாரிப்பு பயிற்சியை போரதீவுப்பற்றில் 23 பேர் நேற்று வியாழக்கிழமை பூர்த்தி செய்துள்ளனர்.

உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பு, இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்று பிரிவின் ஊடாக இந்தப் பயிற்சியை நடத்தியது.

போரதீவுப்பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 23 பெண்களுக்கு 'பன்' மூலப்பொருளைக் கொண்டு கைப்பை, தொப்பி, பூத்தட்டு உட்பட அலங்காரப் பொருட்களை தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட்டது.

இவர்கள் எதிர்வரும் 27ஆம் திகதியிலிருந்து இவ்வாறான தயாரிப்புக்களை மேற்கொள்ளவுள்ளனர். இவர்களின் தயாரிப்புக்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .