2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

24ஆவது வருட நினைவுதினத்தின்போது முறுகல்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு பொலிஸாருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சத்துருக்கொண்டானில் செவ்வாய்க்கிழமை (09) மாலை முறுகல் நிலை ஏற்பட்டது.

மட்டக்களப்பு சத்துருக்கொன்டான், பனிச்சையடி, பிள்ளையாரடி மற்றும் கொக்குவில் ஆகிய கிராமங்களில் 1990.09.09 அன்று கொல்லப்பட்டவர்களின் 24ஆவது நினைவுதினம் பொது நினைவுத்தூபியடியில் அனுஷ்டிக்க ஏற்பாடாகியிருந்தது.

இந்த நிலையில், கொக்குவிலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு உறவினர்கள் சகிதம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டி விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்தச் சென்றபோது பொலிஸார் தடுக்கவே, முறுகல் நிலை ஏற்பட்டது.

மட்டக்களப்பு  மாவட்ட நீதிமன்றத்தால், பொதுமக்கள் கூடும் இடங்களில் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும்போது மக்களுக்;கும் சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படாது தடுக்கவே இந்தத் தடை விதிக்கட்டுள்ளது என நீதிமன்ற உத்தரவை பொலிஸார் படித்துக்காட்டினர்.

அப்போது நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோவிலில் நாங்கள் சுடர் ஏற்றுவோம் உங்களால் தடுக்கமுடியாது எனத் தெரிவித்து கொக்குவில் வீரம்மா காளியம்மன்  கோவில் நுழைவாயிலில் 24 சுட்டிகளை ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி  24ஆவது  வருட  நினைவுதினத்தை  அனுஷ்டித்தனர்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.யோகேஸ்வரன், பி.செல்வராசா, பி.அரியநேத்திரன் ஆகியோரும் மற்றும் குறிப்பிட்ட உறவினர்களும்; கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X