Freelancer / 2022 பெப்ரவரி 20 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 02 நபர்களுக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், 27 பேருக்கு சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.யூ. அப்துல் சமட் தெரிவித்தார்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸின் ஆலோசனைக்கமைய பொத்துவில் பிரதேசத்தில் சனிக்கிழமை (19) பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் விசேட டெங்கொழிப்பு செயலணியினர் இணைந்து வீடு வீடாகச் சென்று டெங்கொழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
பருவ மழை பெய்ததையடுத்து பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் 198 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதில் கூடுதலாக கர்ப்பிணித்தாய்மார்கள், சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுக்குட்பட்ட 07 கிராம சேவகர் பிரிவுகளில் 535 வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட டெங்கொழிப்பு பரிசோதனையின் போதே டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருந்த 02 நபர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதோடு 27 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டவர்கள் ஒரு வார காலத்திற்குள் குறித்த இடங்களை துப்பரவு செய்ய வேண்டுமெனவும், மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
நுளம்பு உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்று முழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது.இது தொடர்பாக மக்களுக்கு துண்டுப்பிரசுரம் மூலமும், ஒலிபெருக்கி ஊடாகவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுவருவதாகவும் கூறினார்.
டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான வெற்றுக்காணிகளை வைத்திருப்பவர்கள் இரண்டு வார காலத்திற்குள் துப்பரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்புரவாக தமது இடங்களை வைத்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.(R)
7 hours ago
8 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago
02 May 2026