Freelancer / 2023 மார்ச் 18 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்.
கொழும்பில் இருந்து மூன்று லட்சம் லீற்றர் எரிபொருட்களை ஏற்றிவந்த புகையிரத்தில் இன்று ஏற்பட்ட தீ புகையிரத ஊழியர்களின் முயற்சினால் பாரிய சேதத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பிற்கு நேற்று மாலை 03.30 மணியளவில் எட்டு கொள்கலன்களுடன் புறப்பட்ட புகையிரதம் இன்று காலை 09.10 மணியளவில் வெலிக்கந்தை புகையிரதத்தில் இருந்து புறப்பட்டு 20 நிமிடத்தில் வெலிக்கந்தை புகையிரத நிலையத்திற்கும் புனானை புகையிரத நிலையத்திற்கும் இடையில் புகையிரத இயந்திர பகுதியில் தீ பிடித்துள்ளது.
இதை புகையிரத வீதி திருத்த வேலையில் ஈடுபட்ட ஊழியர்கள் அவதானித்ததை அடுத்து புகையிரதத்தை நிறுத்தி பாரிய விபத்தில் இருந்து பாதுகாத்துள்ளனர் என்று புகையிரத நிலைய அதிகாரி தெரிவித்தார். R
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
1 hours ago