2026 மே 09, சனிக்கிழமை

dd

3 கோடியே 21 இலட்சம் ரூபா நிதியில் இந்து ஆலயங்கள் அபிவிருத்தி

Kogilavani   / 2013 ஜூன் 03 , மு.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3 வருடங்களில் இந்து ஆலயங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்தினால்  3 கோடியே 21இலட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய கலாசார அலுவலகள் திணைக்களத்தின் ஆலய பிரிவுக்கான உதவிப் பணிப்பாளர் எம்.சண்முகநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களின் நிர்வாகிகளுக்கான கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'மட்டக்களப்பு மாவட்டத்தில் 21 இந்து சிறுவர் இல்லங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 8 இலட்சத்து இருபத்தி ஐய்யாயிரம் ரூபாவை இந்து சமய கலாசார அலுவலகள் திணைக்களம் வழங்கியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 811 இந்து ஆலயங்களும் 300 இந்து மாமன்றங்களும் இந்து சமய கலாசார அலுவலகள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் தனி நபர் ஒருவர் நடத்தும் ஆலயம் அல்லது ஒரு குடும்பம் நடாத்தும் ஆலயம் பதிவு செய்யப்படமாட்டாது. அந்தவகையில் பதிவு செய்யப்படாத இந்து ஆலயங்களும் உள்ளன.

ஆலயங்களின் நிதி நடவடிக்கைகள் முறையாக கையாளப்படுவதுடன் அதில் வெளிப்படத்தன்மை இருப்பது மிகவும் அவசியமாகும்.

இந்து ஆலயங்களில் யாப்பு ஒன்று இருப்பதுடன் அந்த யாப்பு பின்பற்றப்படல் வேண்டும். வறிய மக்களுக்கு இந்து ஆலயங்கள் உதவும் திட்டங்களை தயாரித்து அவைகளை நடைமுறைப்படுத்துவதுடன் ஆலயத்தை சூழவுள்ள மக்களுடன் இறுக்கமான உறவுகளை வைத்துக்கொள்ள வேண்டும்.

கட்டாயம் பொதுக் கூட்டங்களை நடாத்தி ஆலயத்திற்கான நிர்வாகிகளை தெரிவு செய்ய வேண்டும். ஆலயங்களின் பொதுச் சொத்துக்களை தனி நபர் பயன்படுத்தக் கூடாது. ஆலயங்களின் நிதியினை வீண் விரயம் செய்வதையும் ஆலய நிர்வாகிகள் நிறுத்திக் கொள்ளவேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .