2025 மே 02, வெள்ளிக்கிழமை

3 வர்த்தக நிலையங்களுக்க எதிராக சட்ட நடவடிக்கை

Kogilavani   / 2014 மே 27 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்,மாணிக்கப்போடி சசிகுமார்


சுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கும் வகையில் இருந்த மூன்று வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் வை.டி.இராகல் திங்கட்கிழமை (26) தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் கீழ் உள்ள கோட்டைமுனை பொதுச்சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் மற்றம் வர்த்தக நிலையங்களில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட திடிர் சுகாதார பரிசோதனையின் போது மேற்படி வர்த்தக நிலையங்கள் பாவனைக்கு உதவாத, காலாவதியான பொருட்களை விற்பனை செய்து வந்தமை தெரியவந்தது.

கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் வை.டி.இராகல் தலைமையில் பொதுச்சுகாதார பரிசோதகர் பயிலுனர்கள் இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது மனித பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியான பெருமளவான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர் வை.டி.இராகல் தெரிவித்தார்.

திருமலை வீதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவு விடுதிகளிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் வை.டி.இராகல் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .