2026 மே 09, சனிக்கிழமை

300 மில்லியன் செலவில் காத்தான்குடியில் வீதி அபிவிருத்தி

Kogilavani   / 2013 ஜூன் 19 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


காத்தான்குடி நகரசபை பிரிவில் 300 மில்லியன் ரூபாய் செலவில் வீதி அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருளாதார பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீடுகளிலிருந்து இப்பாதை நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகினறன.

யுத்தம், சுனாமி, வெள்ளம் ஆகிய காரணங்களால் சேதமடைந்த அனைத்து வீதிகளும் கொங்க்ரீட் வீதிகளாக புனரமைப்புச் செய்யப்படுகின்றன.

அதிகமான வீதி நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. மீதமுள்ள வீதி அபிவிருத்தி பணிகள் யாவும் இவ்வருட இறுதிக்குள் பூர்த்தியடையுமென பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .