2025 மே 03, சனிக்கிழமை

300 குடும்பங்களுக்கு அரிக்கன் விளக்குகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 13 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


300 குடும்பங்களுக்கு அரிக்கன் விளக்குகள் வழங்கி வைப்புமட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் உள்ள பன்சேனை பகுதிக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படாத காரணத்தினால் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு சுமார் 10 இலட்சம் ரூபா நிதியில் அரிக்கன் விளக்குகள் புதன்கிழமை பன்சேனை பாரி வித்தியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டன.

மண்முனை மேற்கு கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் உறவிகளின் லெடர் (ஏணிகள்) அமைப்பின் மூலம் பன்சேனையில் உள்ள 300 குடும்பங்களுக்கு இந்த விளக்குகள் வழங்கி வைக்கப்பட்டன.

முதல் கட்டமாக 300 விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக 1000 விளக்குகள் வாழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வித்தியாலய அதிபர் வ.சுந்தரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் லெடர் அமைப்பின் இணைப்பாளரும் யாழ்.பல்கலைக்கழக புவியியல் பீட விரிவுரையாளருமான பேராசிரியர் குகபாலன், கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார பீட பீடாதிபதி கலாநிதி இராஜேந்திரம் மற்றும் மண்முனை மேற்கு கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

வடக்கு பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புலம்பெயர் மக்களின் பங்களிப்புடன் பல்வேறு உதவித்திட்டங்களை மேற்கொண்டுவரும் லெடர் அமைப்பானது கிழக்கு மாகாணத்திலும் யுத்ததத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இதன் கீழ் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த காலத்தில் பல வாழ்வாதார திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

எதிர்வரும் காலத்தில் இப்பிரதேச மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகவும் தேவையினை பூர்;த்திசெய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக லெடர் அமைப்பின் இணைப்பாளரும் யாழ் பல்கலைக்கழக புவியியல் பீட விரிவுரையாளருமான பேராசிரியர் குகபாலன் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X