2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 4 இலட்சம் பேர் பாதிப்பு

Kogilavani   / 2014 டிசெம்பர் 28 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கே.எல்.ரி.யுதாஜித், வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன்
, ஆர்.ஜெயஸ்ரீராம்

சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 338 கிராம சேவையாளர் பிரிவுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 138,100 குடும்பங்களைச் சேர்ந்த  493,879 பேர் வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

இவர்களில், 133,101 பேர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் 9085 குடும்பங்களைச் சேர்ந்த 298,000 பேர் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், உறவினர் நண்பர்கள் வீடுகளில் 68,787 குடும்;பங்களைச் சேர்ந்த 247,929 பேர் தங்கியுள்ளனர்.

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருப்பதற்கென 112 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து 25 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான சமைத்த உணவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்து வரும் மழை காரணமாக 4122 வீடுகள் முழுமையாகவும், 8387 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அறிக்கையிடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.








  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X