2026 மே 07, வியாழக்கிழமை

45 கைக்குண்டுகள், 10 மிதிவெடிகள் மட்டக்களப்பில் மீட்பு

Kanagaraj   / 2013 மே 16 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பில், 45 கைக்குண்டுகளும் 10 மிடிவெடிகளும் மீட்க்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு  சுவிஸ் கிராமம் பாலமீன் மடுவிலுள்ள பாலடைந்த வீடொன்றின் சமையலறை பகுதியில் புகைக்கூண்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வு பொலிஸ் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இந்த வெடிப்பொருட்;கள் இன்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் காலத்தில் இவை  மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .