2025 மே 01, வியாழக்கிழமை

50 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் போட்டோ பிரதி இயந்திரம் கையளிப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 21 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவின் 50 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு ரயில் நிலையத்துக்கான போட்டோப்பிரதி இயந்திரம் மற்றும் தளபாடங்கள் என்பன பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

இவற்றினை கையளிக்கும் நிகழ்வு ரயில் நிலையத்தின் அதிபர் ஏ.எல்.எம்.அலீம் தலைமையில் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (20) இடம்பெற்றது.

இதன்போது, போட்டோ பிரதி இயந்திரம் ஒன்றும் மரத்தாலான 15 கதிரைகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா பிரதம அதிதியாக கலந்துகொண்டு பொருட்களை வழங்கிவைத்தார்.

இதேவேளை, நிலைய அதிபர் ஏ.வசந்தகுமார் உட்பட நிலைய ஊழியர்கள், அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இப்புகையிரத நிலையத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த குறைப்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இப்பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .