2025 மே 02, வெள்ளிக்கிழமை

51 பெண் தாதிய மாணவிகளுக்கு தொப்பி அணிவிப்பு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சிஹாரா லத்தீப்


மட்டக்களப்பு தாதியர் கல்லூரியில் தாதியர் பயிற்சியில் ஒருவருடத்தை பூர்த்தி செய்து கொண்ட தாதிய மாணவர்களை தாதியர் சேவைக்கு அர்ப்பணிக்கும் விசேட நிகழ்வு இக்கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

இக்கல்லூரி அதிபர் கே.ஏ.சுனில் சாந்த தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர்.கே.முருகானந்தன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் பிரதம தாதிய உத்தியோகத்தர்களான பி.தர்மசுந்தரம், கே.மகேந்திரன், எஸ்.நடேசன், தாதியர் கல்லூரி போதனாசிரியர்களான வி.அற்புதவடிவேல், எஸ்.இந்திராணி, ஜே.சிறிதரன் உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமாகி இருந்தனர்.

தாதியத்தின் ஸ்தாபகர் விளக்கேந்திய சீமாட்டி என அழைக்கப்படும் புளோரன்ஸ் நைற்றிங்கேல் அம்மையாருக்கு அதிபர் விளக்கேற்றியும், தாதிய போதனாசிரியர் இந்திராணியினால் மாலை அணிவித்து நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது ஒரு வருட பயிற்சியை பூர்த்தி செய்த 53 தாதிய மாணவர்கள் சிறந்த தாதிய சேவைக்கு சத்தியவாக்கு பெற்றுக்கொண்டதுடன் 51 பெண் தாதிய மாணவிகளுக்கு தொப்பி அணிவிக்கும் விசேட நிகழ்வும் இடம்பெற்றது. இத் தாதிய மாணவர்கள் 2015 பெப்ரவரி மாதம் அளவில் பயிற்சியை நிறைவு செய்யவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .