2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

59 இலங்கை இராஜதந்திரிகள் மட்டு. விஜயம்

Super User   / 2012 ஜூலை 09 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 59 இராஜதந்திரிகள் இன்று திங்கட்கிழமை மாலை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டனர்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகருக்கு விஜயம் செய்த இராஜந்திரிகளை மட்டு. பொது நூலகத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளர்  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார்.

51 நாடுகளில் இலங்கை அரசின் பிரதிநிதிகளாக செயற்படும் 59 தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களே இந்த விஜயத்தில் பங்குபற்றினர்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மட்டு. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டனர்.

இத்தூதுக்குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டனர்.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .