Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 மே 10 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - கொக்குவில் மற்றும் மட்டு. தலைமையக பொலிஸ் பிரிவுகளிலுள்ள பிரதேசத்தில் பூட்டியிருந்த 6 வீடுகளை உடைத்து அங்கிருந்து பணம், தங்க நகைகள், மடிக்கணினி மற்றும் மின் உபகரணங்களை திருடிவந்த 14 வயதுச் சிறுவனுடன் இருவரையும் திருட்டுப் பொருட்களை வாங்கிய கடை முதலாளிமார் நால்வர் என 6 பேரை, திங்கட்கிழமை (8) கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் 4ஆம் திகதிவரை அந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக பூட்டியிருந்த 4 வீடுகளின் கூரை மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்து அங்கிருந்த 4 மடிக்கணினி, கையடக்க தொலைபேசிகள், தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான மின்சார உபகரணங்கள் திருட்டுப்போயுள்ளன.
இது தொடர்பாக கொக்குவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி.சசீந்திராவுக்கு கிடைத்த தகவலையடுத்து, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எதிரிமான வின் ஆலோசனைக்கமைய, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கே.யு.பி. விமலரத்தினவின் வழிகாட்டலில், சம்பவதினமான திங்கட்கிழமை பெரும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் கொக்குவில் பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுவன் மற்றும் 25 வயது இளைஞனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நான்கு வீட்டை உடைத்தது திருடியதுடன், மட்டக்களப்பு நகர் கண்ணகையம்மன் 7 குறுக்கு வீதியிலுள்ள பூட்டியிருந்த வீடு ஒன்றை கடந்த 5ஆம் திகதி உடைத்து, அங்கிருந்து ஒரு பவுண் தங்க சங்கிலி, 3 தோடுகள், கையடக்க தொலைபேசிகள் திருடியதுடன், பார்வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து மரம்வெட்டும் மிசார உபகரணம் மற்றும் மின்சார உபகரணங்களை திருடியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து திருடிய பொருட்களை மீட்டதுடன், திருடிய மடிக்கணினி, தண்ணீர் மோட்டர் மற்றும் தங்கநகைகளை வாங்கிய காத்தான்குடி, சத்துருக்கொண்டான், கொக்குவில் பிரதேசங்களைச் சேர்ந்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம், பழைய இருப்பு விற்பனை நிலையம் மற்றும் நகைக்கடை போன்ற கடை முதலாளிகள் 4 பேரை திருட்டுப் பொருளை வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்வர்களை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தியபோது, திருட்டில் ஈடுபட்ட 14 வயது சிறுவனையும் இளைஞனையும் 14 நாட்டகள் விளக்கமறியலல் வைக்குமாறும் திருட்டு பொருட்களை வாங்கிய கடை முதலாளிமார்களான 4 பேரையும் நீதவான் பிணையில் விடுவித்தார். (N)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago