2026 மே 09, சனிக்கிழமை

அலுவலக தளபாடங்கள் விநியோகம்

Kogilavani   / 2013 ஜூன் 21 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்
, தேவ அச்சுதன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு சுமார் 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலுவலக தளபாடங்கள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மாவட்டத்திலுள்ள 345 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் கடமை புரியும் பட்டதாரிகளின் அலுவலகங்களுக்கே இவை வழங்கப்பட்டதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இந்நிகழ்வு, மட்டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது,  ஒருவருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான அலுவலக தளபாடங்களை பொருளாதார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வின்போது எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக இலங்கை திட்டமிடல் சேவை சங்க மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகத்தர்களால் கௌரவிக்கப்பட்டார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .