Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடலுக்கு வலு கொடுக்கும். தேகம் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.
அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்குவதோடு,. நன்கு பசியைத் தூண்டுகிறது. அத்துடன் குடல் புண்ணை ஆற்றுதல், வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.
புடலங்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கக்கூடியது. மூலநோய்க்காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். அத்துடன் சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். மேலும்ஆண்மைக் கோளாறுகளைப் போக்குவதோடு, உடல் தளர்ச்சியைப் போக்கி வலுவும் கொடுக்கும்.
கருப்பைக் கோளாறுகளைப் போக்குவதோடு, கண் பார்வையையும் தூண்டுகிறது. இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும். இதய கோளாறு உள்ளவர்கள் புடலங்காய் இலையின் சாற்றை எடுத்து தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு எடுத்து, 48 நாட்களுக்கு சாப்பிட்டு வர இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
புடலங்காயில் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளதால், நமது எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்தது. இதிலுள்ள அதிகப்படியான தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கும் தன்மை உடையவை. பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு.
49 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
52 minute ago
1 hours ago