Mayu / 2024 ஜூன் 25 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
குளவி கொட்டுக்கு இலக்கான, மஸ்கெலியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், பேராதனை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் ஆறு நாட்களுக்குப் பின்னர் மரணமடைந்துள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான, சிவகுமார் அந்தோனி டெரிண்டா (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வயது உடைய 2 குழந்தைகளின் தாய் ஆவார்.
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் மஸ்கெலியா கிலன்டில் பிரிவில், 19 ம் திகதி பணிபுரிந்து கொண்டு இருந்த போது, தனி ஒரு குளவி கொட்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண், மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் மாற்றப்பட்டார். எனினும், மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னரே மரணமடைந்துள்ளார்.
செ. தி. பெருமாள்
25 Mar 2026
25 Mar 2026
25 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Mar 2026
25 Mar 2026
25 Mar 2026