Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Niroshini / 2017 மே 20 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
தென்கொரியா அரசாங்கத்தினால் சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுயத்தொழில் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை கண்காணிப்பதற்காக இலங்கைக்கான கொரியா நாட்டுத் தூதுவர் Won Sam Chang நேற்று(19) சப்ரகமுவ மாகாண சபைக்கு விஜயம் செய்தார்.
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இலங்கைக்கான கொரியா நாட்டுத் தூதுவர் Won Sam Chang மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் அகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று(19) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
தென்கொரியா அரசாங்த்தின் Koren Internatinal Co-operation (Koica) நிறுவனம், சேமாவுல் கோலிய அமைப்பு என்பன சப்ரகமுவ மாகாண சபையுடன் இணைந்து சப்ரகமுவ மாகாணத்தில் பாரம்பரிய மற்றும் மற்பாண்ட கைத்தொழில், காலான் வளர்ப்பு போன்ற சுயத்தொழில் உட்பட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்துள்ளன.
மேற்படி அபிவிருத்தி திட்டத்தின் மூலம் இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொடை தேர்தல் தொகுதியில் பாஹலகம, கேகாலை மாவட்டத்தில் பிட்டியேகம, ஹேவாதிவெல ஆகிய கிராமத்தில் கலான் உற்பத்தி மற்றும் மற்பாண்ட கைத்தொழில் உட்பட சுயத்தொழிலை ஊக்குவிக்கவும் மற்றும் பிட்டியேகம, ஹேவாதிவெல, பாலகம ஆகிய பிரதேசங்களில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நூல் நிலையம், நீர்பாசனதுறை உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதற்கும் தென் கொரியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைக்கான கொரியா நாட்டுத் தூதுவர் Won Sam Chang,
“தென்கொரியா அரசாங்கத்தினால் சப்ரகமுவ மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சுயத்தொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கு கொரியா அரசாங்கத்தின் மூலம் மேலும் தேவையான உதவிகளை சப்ரகமுவ மாகாணத்துக்கு பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
இதன்போது மாகாண முதலமைச்சரின் சேவையை பாராட்டி கொரியா நாட்டு தூதுவர் Won Sam Chang சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்துக்கு விருது வழங்கி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் தென்கொரியா அரசாங்கத்தின் Koren Internatinal Co-operation (Koica) நிறுவனம், சேமாவுல் கோலிய அமைப்பின் பணிப்பாளர் Woo yun Chae மற்றும் சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன, உதவி பிரதான செயலாளர் பராக்கிரம பியசேன, மாகாண பிரதான அமைச்சின் செயலாளர் கபில் பெரேரா, பிரதான அமைச்சின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் நெவில் குமாரகே மற்றும் கொரியா நாட்டு தூதுவரின் செயலாளர் அதிகாரிகள் உட்பட சப்ரகமுவ மாகாண அமைச்சின் செயலாளர்கள் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
11 Jul 2025
11 Jul 2025
11 Jul 2025