2021 ஜூன் 14, திங்கட்கிழமை

நோய்களால் பாதித்தோருக்கு நிதியுதவி

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் நோய்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நிதியுதவி வழங்கும் திட்டத்தை சப்ரகமுவ மாகாண சமூகசேவைகள் அமைச்சு ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய  மாகாணத்தில் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்ட 50 நோயாளர்களுக்கு,  மாகாண சமூக சேவைகள் அமைச்சு,  11 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி வைத்தது.

சப்ரகமுவ மாகாண சபையில் அமைந்துள்ள சமூக சேவைகள் அமைச்சில் திங்கட்கிழமை (1) நடைபெற்ற இந்நிகழ்வில், மாகாண கிராமிய கைத்தொழில் அமைச்சர் ரஞ்ஜித் பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .