Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Kogilavani / 2017 மே 19 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா நகரத்தில் உள்ள மிகவும் பழமைவாய்ந்த தபாலகத்தை விற்றுவிடுவதற்கு திட்டங்கள் தீட்டப் புபட்டுள்ளனவென மிகவும் நம்பகரமான வட்டாரத் தகவல் தெரிவித்தது.
நுவரெலியா நகருக்கு வருகைதருகின்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அந்த தபாலகம் வெகுவாக கவரும். அந்த தபாலகத்தையே, இந்திய நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்வதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அந்த நிறுவனம், தபாலகத்தை உணவகமாக மாற்றவுள்ளதாக அறியமுடிகின்றது. கடந்தவாரம் கூடிய பொருளாதார மேம்பாட்டு குழுக் கூட்டத்தின் போதே, இந்த விவகாரம் வெகுவாக கலந்துரையாடப்பட்டதாகவும், அந்த தபாலகத்தை விற்பனை செய்வதற்கு அக்குழுக்கூட்டத்தின் போது அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
வரலாற்று பெறுமதிமிக்க, ஆங்கிலேயரினால் 1594 ஆம் ஆண்டு, பிரித்தானிய கட்டட கலைஞர் டியூட்டர் ரிவைல் என்பவரினால், இந்த தபால் காரியாலய கட்டடம் வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது.
இலங்கை தபால் திணைக்களம் வசமிருக்கின்ற, விலைமதிக்கமுடியாத சொத்துகளில், நுவரெலியா தபாலகமும் ஒன்றாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
34 minute ago
36 minute ago
45 minute ago