2021 ஜூன் 16, புதன்கிழமை

4 மாணவிகளை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயன்ற ஆசிரியர் கைது

Sudharshini   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பாடசாலை மாணவிகள் நால்வரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயன்ற நோர்வூட் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் இன்று (28) கைதுசெய்துள்ளனர்.

மஸ்கெலியா பகுதியிலுள்ள தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 14 மற்றும் 15 வயதுடைய 4 மாணவிகளை, ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக குறித்த மாணவிகளின் பெற்றோர் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் இன்று (28) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தனர்.

மேற்படி முறைப்பாட்டுக்கு அமையவே குறித்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த ஆசிரியர் வீட்டில் வகுப்பு நடத்துவதாக கூறி, வீட்டு வரவழைத்து குறித்த 4 மாணவிகளையும் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக 4 மாணவிகளும் பொலிஸாருக்கு வாக்குமூலமும் அளித்துள்ளனர்.

குறித்த 4 மாணவிகளும் பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .