2021 மே 13, வியாழக்கிழமை

லெதண்டி காட்டிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2016 மார்ச் 23 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன்

ஹட்டன், லெதண்டி தோட்ட காட்டுப் பகுதியிலிருந்து, உருக்குழைந்த நிலையில் பெண்ணின் சடலத்தை(மனித எச்சம்) ஹட்டன் பொலிஸார் இன்று(23) மீட்டுள்ளனர்

லெதண்டி தோட்டத்துக்குறிய மாணாபுல் காட்டிலிருந்து இச்சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். மேற்படி பகுதிக்கு விறகு வெட்டுவதற்காக சென்ற அயலவர்கள், சடலத்தை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சடலம் அடையாளம் காணமுடியாத நிலையில் உருக்குழைந்து காணப்படுவதாகவும் அருகில் எலும்புக் கூட்டு எச்சங்கள் காணப்படுதவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சடலத்தில் காணப்பட்ட சாரி  மற்றும் கையில் அணிந்திருந்த வளையல் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கண்டெடுக்கபட்ட மனித எச்சங்களை பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .