Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தியாகு)
நுவரெலியா மாநகர சபைக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை எந்த ஒரு காரணம் கொண்டும் யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என நுவரெலியா மாநகர சபையின் உறுப்பினர் இரா.பாலகிருஷ்ணன் கூறினார்.
நுவரெலியா மாநகர சபையின் ஆகஸ்ட் மாத கூட்டம் நகர முதல்வர் சந்தணலால் கருணாரத்ன தலைமையில் நேற்று இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாநகர சபையின் விளையாட்டு மைதானத்தை திருத்தி அமைத்து அதற்கு சந்தணலால் கருணாரத்ன விளையாட்டு மைதானம் என பெயரிட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அதேவேளை, மத்திய ஊவா மாகாணங்களில் மூடப்பட்டிருக்கும் அனைத்து பெருந்தோட்ட தொழிற்சாலைகலையும் மீண்டும் இயங்க வைக்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
ஊவாவில் மூடப்பட்டிருக்கும் அனைத்து பெருந்தோட்ட தொழிற்சாலைகள் தொடர்பில் ஜனாதிபதி அண்மையில் அறிக்கை ஒன்றை தமக்கு பெற்றுத் தருமாறு கோரியிருந்தார். இன்று மத்திய மாகாணத்திலும் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன அவற்றுக்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பாலகிருஷ்னன் வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .