2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

கம்பளையில் இரு குழுக்களிடையே மோதல்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கம்பளை நிருபர்)

கம்பளை இலங்காம்வத்தைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த 3 இளைஞர்கள் கம்பளை போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்காம்வத்தை பகுதிக்கு நேற்றிரவு மதுபோதையில் வந்த 4 இளைஞர்களுக்கும் அப்பகுதி இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மோதலின்போது, இரு சாராரும் கத்தி, கம்பி, பொல்லுகள் மற்றும் கற்களாலும் தாக்கியதாகத் தெரியவருகிறது.

இவ் இளைஞர் குழுக்களுக்கிடையிலான மோதலுக்கு காதல் விவகாரமொன்றே காரணமாக இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜாலிய ஹீன்கந்த தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .