2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

மத்திய கலாசார நிதிய அதிகாரிகளுக்கு பிடியாணை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

மத்திய கலாசார நிதியத்தின் சிகிரியா திட்டத்தை சேர்ந்த இரு அதிகாரிகளுக்கு சிகிரியா நடமாடும் நீதவான் மஹேஷிகா தனன்சூரிய பிடியாணை பிறப்பித்தார்.

மத்திய மாகாணத்திலுள்ள உலக மரபுரிமை பிரதேசங்களில் ஒன்றான சிகிரியா பிரதேசத்தில் சட்டவிரோத முறையில் கட்டப்படுவதாக கூறப்படும் இரு கட்டடங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்த இருவர்  சம்மந்தமாக விளக்கமளிப்பதற்கு நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காத காரணத்தாலேயே இவர்களுக்குப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய கலாசார நிதியத்தின் சிகிரியா திட்டத்தை சேர்ந்த சன்ன பண்டார மற்றும் ஏ.டப்லிவ்.திஸாநாயக்க ஆகிய இருவருக்குமே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .