2021 ஜூன் 24, வியாழக்கிழமை

பேராதனை பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

Kogilavani   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.எம்.ரிஃபாத்)

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  பேராதனை  பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதவான் லலித் ஏக்கநாயக்கா நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

கடந்த ஜீலை மாதம் 12 ஆம் திகதி உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா பேராதனை  பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த போது அவருக்கு  இடையூறு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக நான்கு பீடங்களைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இம்மாணவர்களை பொலிஸார் கண்டி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்திய போது நேற்று 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இதன் படி நேற்று மீண்டும் கண்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது நீதவான் இந் நால்வரையும் தொடர்ந்து  எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கமாறு உத்தரவிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .