2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

தீபாவளியை முன்னிட்டு ஹட்டனில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

தீபாவளி பண்டிகைக்குப் பொருள் கொள்வனவுக்காக ஹட்டன் நகருக்கு வருகைத் தருகின்ற மக்களின் பாதுகாப்பு கருதி இன்று 29ஆம் திகதி முதல் விசேட பொலிஸ் பாதுகாப்பு சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப ஹட்டன் நகரின் பாதுகாப்புக்காக் சீரூடையிலும் சிவில் உடையிலும் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை காலங்களில் ஹட்டன் நகருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வருகைத்தருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.  அத்துடன் திருடர்களின் நடமாட்டமும் இக்காலப்பகுதியில் அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்பாக செயற்பட வேண்டுமென ஹட்டன் பொலிஸார் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .