2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

பெண் கைதிகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிட தொகுதி திறந்துவைப்பு

Super User   / 2011 மார்ச் 28 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

பதுளை சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிட தொகுதியொன்று புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் இன்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

பதுளை சிறைச்சாலைக்கு விஜயம் செய்த அமைச்சருக்கு மரியாதை அணி வகுப்பும் வழங்கப்பட்டதை தொடர்ந்து பெண் கைதிகளுக்கான கட்டிட தொகுதியை அமைச்சர் திறந்துவைத்தார்.

அமைச்சருடன் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் வீ.ஆர். சில்வா, அமைச்சின் செயலாளர் ஏ.திசாநாயக்க உள்ளிட்ட பல அதிகாரிகளும் இதன்போது கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .