2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

தொலைபேசி கம்பிகளை திருடி விற்றவர் கைது

Super User   / 2011 ஏப்ரல் 06 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.எம். ரம்ஸீன்)

நாவலப்பிட்டிய முதல்  கலபொடை வரையான ரயில் பாதையில் பொருத்தப்பட்டிருந்த 15 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைபேசி கம்பிகளை வெட்டி திருடி வந்த கும்பலின் பிரதான சந்தேக நபரை நாவலப்பிடிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இத்தொலைபேசி தூண்களில் பொருத்தப்பட்ட இறப்பர் பாதுகாப்பு வலயம் கொண்ட கம்பிகள் வெட்டப்பட்டிருப்பது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரனை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.

இவரிடம் இருந்து விற்பனைக்காக ஒளித்து வைக்கப்பட்டிருந்த கம்பிச் சுருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை நாவலப்பிடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .