2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

அக்கரப்பத்தனையில் மீண்டும் கோவில்கள் உடைக்கப்பட்டன

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 16 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

அக்கரப்பத்தனை,டயகம பகுதிகளில் தொடர்ச்சியாக  கோவில்கள் உடைக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக பதிவாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று (16) காலை அக்கரப்பத்தனை- கிளாஸ்கோ வல்லடையான் கோயில், மோனிங்டன் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மற்றும்   கிளபோர்க் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் ஆகியன இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு உண்டியல்களிலுள்ள பெருந்தொகையான பணமும் தங்க நகைகளும் களவாடப்பட்டுள்ளன.

இதேவேளை, இக்கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்  டயகம மோனிங்டன் மேல்பிரிவு தோட்டத்தில் வைத்து இன்று பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு டயகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம மற்றும் அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X