Editorial / 2020 மார்ச் 31 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கப்பத்தனை நகரிலுள்ள பல வர்த்தக நிலையங்களில், அத்தியாவசியப் பொருள்கள் அதிக விலைக்கு விற்பனைச் செய்யப்படுவதாக, நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசாங்கம் நிர்ணயித்த விலையையும் விட, அதிக விலைக்குப் பொருள்கள் விற்பனைச் செய்யப்படுவதாக, நுகர்வோர் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பாக, ஒரு கிலோகிராம் பருப்பு 140 ரூபாய்க்கும் செமன் 350 ரூபாய்க்கும், முட்டை 25 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் 1,000 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கு 170 ரூபாய்க்கும் விற்பனைச் செய்யப்படுவதாக, நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
போதிய வருமானமின்றி பெருந்தோட்டத் தொழிலாளர்கள், பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அதிக விலைக்குப் பொருள்கள் விற்பனைச் செய்யப்படுவதால், தாம் பாரிய இடர்களை எதிர்கொண்டுள்ளதாக, மேற்படி நகரத்திலுள்ள வியாபார நிலையங்களில், பொருள் கொள்வனவில் ஈடுபடும் தொழிலாளர் குடும்பங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, இது தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago