2026 மே 09, சனிக்கிழமை

’அக்குரணையில் டெங்கு தீவிரம்’

மொஹொமட் ஆஸிக்   / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குரணை பிரதேச செயலயகத்துக்குட்பட்ட பகுதிகளில், டெங்குக் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதாக, சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அக்குரணை பிரதேசச் செயலகப் பிரிவில், இந்த வருடத்தில் மாத்திரம், 59 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று, அக்குரணை பிரதேச சுகாதார பரிசோதகர் லின்டன் சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

அக்குறணை பிரதேசத்தில்  நீரெல்லை, புளுகொஹொதென்னை, வராகஸ்ஹின்னை, தெலும்புகஹவத்தை, கஸாவத்தை,  அலவத்துகொடை, ரம்புக்எல கொனகலகல, தெல்கஸ்கொட  ஆகிய பிரதேசங்களில், டெங்கு நோயாளிகள் அதிகளவில் காணப்படுவதாக அவர் கூறினார்.

இப்பிரதேசத்தில், டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, எதிர்வரும் 30ஆம் திகதி, அக்குரணை பிரதேச செயலகம் முழுவதும், டெங்கு தடுப்பு வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அன்றைய தினம், அனைத்து வீடுகளுக்கும் விஜயம் செய்து, டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .