Editorial / 2020 மே 01 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி அக்குறணையை அண்மித்துள்ள பகுதிகளிலிருந்து அத்தியாவசிய பொருள்களைக் கொண்டுச் செல்வதற்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள், திங்கட்கிழமை(4) வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அக்குறணை பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
அக்குறணையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் பலர் இனங்காணப்பட்டதையடுத்து அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்து வெளியேறுவதற்கும் உள்நுழைவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அக்குறணையை அண்மித்துள்ள பிரதேசங்களிலிருந்து அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டுச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. குறித்த வாகனங்களில் கொண்டுவரப்படும் பொருள்கள் இடைநடுவில் வேறு வாகனங்களுக்கு மாற்றப்படுவதைக் கருத்திற்கொண்டே, அனுமதிப்பத்திரத்தை திங்கட்கிழமை வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அக்குறணை பிரதேச செயலாளர் ஏ.எச்.எம்.இந்திகா குமாரி தெரிவித்தார்.
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago