மொஹொமட் ஆஸிக் / 2019 மார்ச் 25 , மு.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குறணை வைத்தியசாலையை, ஆதார வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தபால், முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம். எச்.ஏ. ஹலீமின் அழைப்பின் பேரில், நேற்று (24), அக்குறணை வைத்தியசாலைக்கு, அமைச்சர் ராஜித சேனாரத்ன, விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, இந்த வைத்தியசாலையை அபிவிருத்திச் செய்வதற்கு, அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லை என்பதால், வைத்தியசாலையின் அபிவிருத்திகள் அனைத்தும் முடங்கியுள்ளதாக, அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.
இதையடுத்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன,
ஏ9 வீதியில் அமைந்துள்ள முக்கிய வைத்தியசாலையான அக்குறணை வைத்தியசாலையை, ஆதார வைத்தியசாலையாக அபிவிருத்திச் செய்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்படும் என்றும் கூடிய விரைவில் இந்த வைத்தியசாலை, ஆதார வைத்தியசாலையாக மாற்றப்படும் என்றும் அவர் கூறினார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago