Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Gavitha / 2021 மார்ச் 09 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனமும் அச்சுறுத்தல்களும் தொடருமாயின், தோட்ட நிர்வாகிகள், மல்லிகைப் பூ சந்தியில், தொடர் போராட்டங்களை நடத்தவேண்டி ஏற்படலாம் என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் பதுளை பிராந்திய பணியகத்தில், நேற்று (08) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தோட்டத் தொழிலாளர்களின் நியாயப்பூர்வமான கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டங்களை மேற்கொள்ளும் இடமாக, மல்லியப்பூ சந்தி மாறிவிட்டது என்றும் அத்தகைய இடத்திலேயே, தோட்ட நிர்வாகிகளும், தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக, போராட்டம் நடத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக, தோட்ட நிர்வாகங்களால் கட்டவிழ்த்து விடப்படும் அடாவடித்தனங்கள், அச்சுறுத்தல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து செல்லுமேயானால், அதன் பிரதிபலனை, தோட்ட நிர்வாகிகள் விரும்பியோ, விரும்பாமலோ எதிர்கொள்ள வேண்டி எற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தோட்டங்களில், நிர்வாகிகளுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் பல பிணக்குகள் ஏற்பட்டாலும், இது பொலிஸ் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் எனினும் பொலிஸார் நிர்வாகத்துக்கே ஆதரவாக செயற்படும் கலாசாரம் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால், அப்பாவித் தோட்டத் தொழிலாளர்களே பாதிக்கப்படுகின்றனர் என்றும் பெருந்தோட்டங்களில் நிலவும் அமைதியின்மைக்கு, அனுபவமற்ற தோட்ட நிர்வாகிகளின் கடமைச் செயற்பாடும் காரணமாக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
30 Apr 2025
30 Apr 2025