Editorial / 2020 ஜூலை 22 , பி.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
150 ஆண்டு கால அடிமை வரலாற்றில் இருந்து மீண்டெழுந்து வரவேண்டும் என, பதுளை மாவட்டத்தில் சுயேச்சையாக போட்டியிடும் சட்டத்தரணி மா.சிறில்ராஜ் தெரிவித்தார்.
ஹல்தமுல்லை- நீடுட் பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 150 ஆண்டுகளுக்கு அதிகமாக, தாங்கள் அனைவரும் அடிமை சமூகமாகவே வாழ்ந்து வருவதாகவும் இந்த நிலையிலிருந்து மாறவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
காலங்காலமாக கூலித் தொழிலாளியாக காணி, வீடு உரிமை இன்றி வாழ்ந்து வருவதாகத் தெரிவித்த அவர், ஏனைய சமூகத்தவர்கள் அனுபவிக்கும் சகல உரிமைகளும் எமது மலையக சமூகத்துக்கும் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இளைஞர், யுவதிகளுக்கு அரச தொழில் வாய்ப்புகளை விகிதாசார அடிப்படையில் வழங்க வேண்டும் என்றும் ஆசிரியர் தொழிலைத் தவிர ஏனைய துறைகளிலும் அரச தொழில் கிடைப்பது பாரிய சவாலாகவே உள்ளது என்றும் தெரிவித்தார்.
எனவே, சிக்கல்களில் இருந்து வெளியில் வரவும் எமது மக்களின் பிரச்சினைகளை பேசுப் பொருளாக்கி, நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தங்களை செய்வதற்கும் தான் குரல் கொடுப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார்.
29 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
41 minute ago