2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அதிகாரிகளே! இது எந்தப் பகுதி?

Gavitha   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

பதுளை அரசினர் வைத்தியசாலையில், நோயாளர்களின் கவனத்துக்காக வைக்கப்பட்டுள்ள அறிவித்தல்களில் உள்ள தவறான வார்த்தைப் பிரயோகங்கள் பற்றி, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், பதுளை மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இக்கடித்தின் பிரதிகள், ஊவா மாகாண ஆளுநர் ஏ.கே.எம். முசாம்மில், ஊவா மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்தின் மிகப் பிரதானமான வைத்தியசாலைக்கு, கணிசமான தமிழர்களும் வந்து செல்கின்றனர் என்றும் இவர்களுக்கு, சிங்கள மொழியில் போதி பரீட்சயம் இன்மையால், தமிழ் மொழியில் எழுதப்படும் அறிவுறுத்தல்கள், சரியான முறையில் எழுதப்படல் வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த வைத்தியசாலையின் சில பகுதிகளில், தனி சிங்களத்தில் மாத்திரம் அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பலகைகளில், தமிழ் மொழியில் தவறான வார்த்தைப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

எனவே இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் சகல நோயாளர்களும் பயனம் பெறும் வகையில் வைத்தியசாலையின் சேவைகள் அமையவேண்டும் என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் என்றும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X