எஸ்.சதிஸ் / 2019 ஜூலை 15 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹட்டன்- கொட்டகலை, யுலிபில்ட் தோட்டத்தில், வீடொன்றுக்குள் வைத்து, ஆண் சிசுவொன்றைப் பிரசவித்துள்ள பெண்ணொருவர், அதிக இரத்தப்போக்குக் காரணமாக உயிரிழந்துள்ளார் என்றும், மேற்படி பெண்ணால் பிரசவிக்கப்பட்ட சிசுவின் சடலம், தோட்டமொன்றில் புதைக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை (13) மீட்கப்பட்டுள்ளதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி இருவரின் சடலங்களும், பிரேதப் பரிசோதனைக்காக, கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அதிக இரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், மேற்படி பெண், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, அவர் சிசுவொன்றைப் பிரசவித்துள்ளமையும் அதனால் ஏற்பட்ட இரத்தப்போக்கால், மரணம் சம்பவித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்படி பெண்ணின் உறவினர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பெண், ஆண் சிசுவொன்றைப் பிரசவித்துள்ளதுடன், அதனைத் தனது வீட்டின் பின்புறத்தில் குழிதோண்டிப் புதைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, ஹட்டன் நீதவான் ஜெயராமன் ட்ரொக்சி முன்னிலையில், சிசுவின் சடலத்தை, பொலிஸார் சனிக்கிழமை (14) தோண்டி எடுத்துள்ளதுடன், இரத்தக்கறைகளுடன் பெண் அணிந்திருந்த ஆடைகளையும் மீட்டுள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக சிசுவின் சடலம், கிளங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பெண்ணுக்கு ஏற்கெனவே 12,07, 03 ஆகிய வயதுகளில் மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்றும் பெண்ணின் கணவர் கொழும்பில் தொழில்புரிந்து வருவதாகவும், விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
41 minute ago
53 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
53 minute ago
2 hours ago
3 hours ago