2026 மே 02, சனிக்கிழமை

அதிக விலையால் யாத்திரிகர்கள் அசௌகரியம்

Editorial   / 2019 பெப்ரவரி 11 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நல்லதண்ணி வழியாக, சிவனொளிபாத மலையக்கு யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களை இலக்கு வைத்து, அதிக விலைக்கு பொருட்கள் விற்பனைச் செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

நல்லதண்ணி நகர் மற்றுமு் நல்லதண்ணி- சிவனொளிபாத மலை வீதியிலுள்ள உணவகங்கள், இனிப்புப் பண்டங்கள் விற்பனை நிலையம், சில்லறைக் கடைகள் உள்ளிட்ட வியாபார நிலையங்களிலேயே, இவ்வாறு அதிக விலைக்கு, பொருட்கள் விற்பனைச் செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இதனால் யாத்திரிகர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

உணவகங்களில் உணவை உண்ணு முடித்ததன் பின்னர், பாரியத் தொகை அறவிடப்படுவதாகவும் குளிர்பாண விற்பனை நிலையங்களிலும் இதே முறைமை பின்பற்றப்படுவதாகவும் தெரிவிக்கும் யாத்திரிகர்கள், மிக நீண்டதூரத்திலிருந்து பயணம் மேற்கொண்டு வரும் தாம், வேறு வழியின்றி, வியாபாரிகள் கேட்கும் தொகையை வழங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் அலைபேசி மீள்நிரப்பு அட்டைகளுக்கு, நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கும் மேலதிகமாக 5 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை அறவிடப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

யாத்திரிகர்களைச் சுரண்டிப் பிழைக்கும் வர்த்தகர்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை கவனம் செலுத்த வேண்டுமென்றும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .