2026 மே 09, சனிக்கிழமை

அதிக விலையில் கோதுமை மா விற்றவர்கள் கைது

எம். செல்வராஜா   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாவனையாளர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், கோதுமை மாவை அதிக விலைக்கு விற்பனை செய்த, வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, மாத்தளை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி ​ரேணுக்க குமார தெரிவித்தார்.

மாத்தளை, அப்பகுதிகளிலுள்ள தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

கட்டுப்பாட்டு விலையைவிட அதிக விலைக்கு கோதுமை விற்றமை, விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை ஆகிய குற்றங்களுக்காக, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

இவர்கள் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றம் எனினும், இன்னும் ஒருவார காலத்தில், இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .