Editorial / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஏ.எம்.பாயிஸ்
இரத்தினபுரி பிரதேசத்தில், அதிக விலையுடைய போதைப்பொருளை விற்பனை செய்யும் பிரதான சூத்திரதாரியொருவரை, நேற்று (02) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரத்தினபுரி, போதிராஜ சந்தியில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், குறித்த சந்தேக நபரின் அசைவுகளைக் கண்டு, தங்களிடம் வருமாறு அழைத்துள்ளனர். இதன்போது, தனது கையில் இருந்த சிறிய பையொன்றை அந்நபர் வீசுவதைக் கண்டுள்ளனர்.
இதன்பின்னர், சந்தேக நபரைப் பிடித்து, அவர் வீசிய பையைப் பரிசோதித்த போதே, அதில் அதிக விலையுடைய போதைப் பொருள் இருப்பதைக் கண்டுள்ளனர்.
இவர், ஈசி கேஷ் முறையில், பல காலமாக இந்தப் போதைப் பொருளை விற்பனை செய்து வந்துள்ளதாக, முதற்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறான போதைப் பொருள், இரத்தினபுரி பகுதியில் கைப்பற்றப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago