2026 ஜனவரி 21, புதன்கிழமை

அதிபர் காலமானார்

Kogilavani   / 2021 மே 26 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.புவியரசன்

பசறை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பசறை இல.02. தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் எம்.வாசுதேவன், உடல் நலக்குறைவு குறைவு காரணமாக கொழும்பு வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று(26) காலை இயற்கையெய்தினார்.

மீதும்பிட்டிய ஏ பிரிவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்,  மீதும்பிட்டிய பகுதியில், “வைட்ரோஸ்” என்ற இளைஞர் கழகத்தை ஸ்தாபித்து, இப்பகுதி இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு உதவி புரிந்தார்.

அத்துடன் பிளேன் இன்டர்நெஷனல் நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு சமூக அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளார்.

இறுதியாக தான் அதிபராகக் கடமையாற்றிய அம்மனிவத்தைப் பகுதியில், “அமுதம் மக்கள் அபிவிருத்தி மன்றம்” என்ற சமூக நலன் மேம்பாட்டு அமைப்பின் செயற்பாடுகளுக்கு ஆலோசகராக இருந்து காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இவர் ஹொப்டன்  கலைமகள் தமிழ் மகா வித்தியாலயம், மீதும்பிட்டிய இல-01 தமிழ் வித்தியாலயம் உட்பட பல பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளதோடு, தன்னுகை தமிழ் வித்தியாலயத்திலும் சில காலம் அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X