Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2023 மே 15 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்னுடைய மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும் அனைத்து வேலை திட்டங்களிலும் நான் முன்னின்று செயல்படுவேன் கட்சிகளோ, சின்னங்களோ மற்றும் வர்ணங்களோ எனக்குத் தேவையில்லை என் மக்களின் எண்ணங்களே முக்கியம் என்கிறார் வடிவேல் சுரேஷ் எம்.பி.
சுமார் 120 குடும்பங்களுக்கு காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் தலைவரும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சருமான ஹரின் பெர்னாண்டோ மற்றும் சங்கத்தின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது..
இதன் போது கருத்து தெரிவித்த வடிவேல் சுரேஷ்
பெருந்தோட்ட தொழிலாளர்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய மக்களுக்கு நன்மை கிடைக்கும் அனைத்து வேலை திட்டங்களிலும் நான் முன்னின்று செயல்படுவேன். கட்சிகளோ, சின்னங்களோ, வர்ணங்களோ எனக்குத் தேவையில்லை என்றார்.
என்னுடைய மக்களின் அபிவிருத்தி செயல்பாடுகளே எனக்கு முக்கியம் எதிர்வரும் காலங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் காணி பகிர்வு தொடர்பாக இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் என்ற ரீதியில் தலைவரும் நானும் முன்னின்று செயல்படுவோம் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago