George / 2016 ஜூன் 02 , மு.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
கேகாலை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடைய தேவைகள் உட்பட நலன்புரி செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் செய்து கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தெரிவித்தார்.
கேகாலை மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் உட்பட சகல தேவைகளையும் விரைவில் பூர்த்தி செய்து கொடுப்பது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட அபிவிருத்திக்குழு கூட்டம் கேகாலை நகரசபை மண்டபத்தில் புதன்கிழமை (01) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் விவரங்களை சேகரித்து அவர்களுக்கான வீடுகளை அமைத்துக் கொடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அபிவிருத்திப் பணிகள் அனைத்தையும் இராணுவத்தினரிடம் ஒப்படைக்க உள்ளோம். இராணுவத்தில் கடமையாற்றும் பொறியியற் பிரிவு அதிகாரிகள் மற்றும் கட்டடப் பிரிவு அமைப்பாளர்கள், அதிகாரிகளின் ஊடாக நிர்மான பணிகள் முன்னெடுக்கப்படும்.
எனவே, அபிவிருத்தி குறித்து அமைச்சர்கள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி, கட்டட நிர்மான பணிகளை இராணுவத்திலுள்ள ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்க உள்ளோம். இதன்போது பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேற்படி விடயங்கள் குறித்து அந்தந்த பிரிவுகளுக்கான அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் குறைந்தப்பட்சம் ஒரு தடவையாவது சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று அபிவிருத்தி பணிகளில் விசேட கவனம் செலுத்த வேண்டும்' என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
11 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago