2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அபராதத் தொகையினால் ரூ.190 மில்லியன் இலாபம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

மொனராகலை மாவட்டத்திலுள்ள 18 பொலிஸ் நிலையங்களினால், நீதிமன்றங்களில் 2016 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் ஊடாக, 190 மில்லியன் ரூபாய், அரசுக்கு இலாபமாகக் கிடைக்கப்பெற்றுள்ளதாக, மொனராகலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்ல தெரிவித்தார்.

வாகனங்களுடன் தொடர்புடைய குற்றங்கள், ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுக்கள், போதைப் பொருள் பாவனை, விற்பனை, திருட்டு, வழிபறி உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் கைதுசெய்யப்பட்டு, குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டப்பணத்திலிருந்தே, இத்தொகை வருமானமாகக் கிடைத்துள்ளது.

மொனராகலை மாவட்டத்தில், வெள்ளவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலேயே, ஆகக் கூடிய குற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

புள்ளிவிவர தகவல்களின் பிரகாரம், தனமல்வில, மொனராகலை, புத்தல, செவனகல, ஹம்பேகமுவை, சியாம்பலாண்டுவ மற்றும் தம்பகல்ல ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், கூடுதலான குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக, அவர் மேலும் கூறினார்.

“மேற்படி பொலிஸ் பிரிவுகளில், குற்றங்களை கட்டுப்படுத்துவதிலேயே, கூடிய கவனம் செலுத்தி வருகின்றோம். ஆகக்கூடுதலான குற்றச்செயல்களை கண்டுபிடித்த, வெள்ளவாய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு, ஊக்குவிப்புத்தொகைகள் பகர்ந்தளிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்” என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .