2026 மே 09, சனிக்கிழமை

அபூசாலி பெயருக்கு பலாங்கொடை நகரசபை எதிர்ப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 30 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

முன்னாள் அமைச்சர் எம்.எல்.எம்.அ பூசாலியின் பெயரை, பலாங்கொடை நகர வீதியொன்றுக்கு வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட யோசனைக்கு, பலாங்கொடை நகரசபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“வாடி வீட்டு வீதி” என்று, பலாங்கொடை நகரிலுள்ள அரசாங்க வாடி வீட்டு வீதிக்கு தற்போது பயன்படுத்தப்படும் பெயருக்கு பதிலாகவே, முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எல்.எம் அபூசாலியின் பெயரை வைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி யோசனை, நகரசபை உ றுப்பினர் எம்.ஜே.மாலிக்க்‌ஷாவால் நகரசபையின் மாதாந்தக் கூட்டத் தொடரில் முன்வவைக்கப்பட்டிருந்தபோது, சபை உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக, சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இந்த யோசனைக்கு, பலாங்கொடை நகர சபை தலைவர் சமிக்க வெவேகெதர உள்ளிட்ட இப்பிரேரணைச் சமர்பித்த நகரசபை உறுப்பினர் தவிர, வேறு எந்த உறுப்பினரும் ஆதரவ வழங்கியிருக்கவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .